மலையாள சிறுகதைகளின் மொழிபெயர்ப்பாக மலர்ந்துள்ள நுால். இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களில் வாழும் மக்களையும், அவர்களது பண்பாட்டு பின்னணியையும் கதாபாத்திரங்கள் வழியாக நுட்பமாக விவரிக்கின்றன.
கதைகளில் இந்திய விடுதலைக்கு முன், பின் என்று மனித வாழ்வின் போக்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. கேட்டறியாத பெயர்கள் எல்லாம் கதாபாத்திரங்களாக அமைந்துள்ளன. மனிதர்கள் தங்கள் உணர்வுகளுக்கு ஏற்ப தகவமைத்து கொள்வதை படம் பிடித்து காட்டும் தொகுப்பாக உள்ளது.
மலையாள மொழி பேசும் மக்கள் வாழ்வின் பின்னணியில் கதைகள் அமைக்கப்பட்டிருந்தாலும், நாட்டின் அடிநாதம் ஒலிக்கிறது. ஆன்மாவை தொடும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
– மதி