முகப்பு » இலக்கியம் » பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே

பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே

விலைரூ.700

ஆசிரியர் : துளசி

வெளியீடு: விழிகள்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை

பக்கம்: 888  

தொல்காப்பியர் சமணர்; அவரைத் தம்மவராக ஆக்கிக் கொள்வதற்காக அகத்தினைஇயல் புகுத்தப்பட்டது. இதேபோன்று தான், திருக்குறள் வைதீகச் சமயத்தைச் சார்ந்தது என்று காட்டுவதற்காகக் "காமத்துப்பால் அதிகாரம் அமைக்கப்படுகிறது. ஆனால், திருக்குறள் சமண முனிவர்கள் எழுதியது (பக்.627) என்று குறிப்பிடும் இந்நூலாசிரியரின் ஆய்வின் நோக்கமே, சங்க இலக்கியங்களில் சமணம் சாராத அனைத்தும் இடைச்செருகல்கள் என்பது தான்."குட்டுவன் மரத்தை அன்ன (பக்.39) என்ற  தோழிக்கூற்றும்,  "தேர் விரைவாகச் செல்லட்டும் (பக். 371) தலைவன் கூற்றும், தொகை நூல்களில் கடவுள் வாழ்த்துக்களும் (பக்.629)   இருந்தால், அவை இடைச்செருகல் தான் (பக்.826) என்கிறார்.

சமணர்கள் தொகுப்பில் ஒழுங்கு முறை இருந்தது. பின்னவர்கள் தொகுப்பில் குழப்பம் இருந்தது (830) என்று கூறும் ஆய்வாளர், வரலாற்றுக் குறிப்புகளை நீக்கிவிட்டுப் பார்த்தால், இருக்கும் அகப்பாடல்கள் 945 என்றும், சமஸ்கிருத பண்பாடு, பெருந்தெய்வங்கள் வழிபாடு இப்படி நீக்கிப் பார்த்தால், மீதமுள்ள 248 புறப்பாட்டும் சேர்ந்து மொத்தம் 1,193 பாடல்கள் தான் பழந்தமிழ் தொகை நூல் பாட்டு, என்று கூறியுள்ளார். ""ஜன கண மன தேசிய கீதத்தில்,"தேசியம் என்ற சொல்லும்,"இந்தியா என்ற சொல்லும் இல்லை என்பதற்காக, அது தேசிய கீதமில்லை என்று கூட நூலாசிரியர் ஆய்வு செய்தாலும் ஆச்சர்யமில்லை. 

        பொது அறிவுச் சிந்தனை ஒன்றை புறந்தள்ளி வைத்துவிட்டு, தனது கருத்துக்கு ஒத்த, சில மேற்கோள்களை மட்டும் அடையாளங்காட்டித் தன் ஆய்வுக்கு வலிமை சேர்க்க, ஆய்வுகளால் தமிழிலக்கியம் வளருமா? பயன் பெறுமா என்பதைத் தமிழறிஞர்கள் தான் ­­­தீர்மானிக்க வேண்டும்.

 

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us