தமிழ்மொழி, பண்பாடு, இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் இலங்கை தமிழர் ஆற்றிய பங்களிப்புகளை முன்வைக்கும் நுால்.
கட்டுரைகளில் எண்ணற்ற இலக்கியச் செய்திகளை அறிய முடிகிறது. இலக்கியம், இலக்கணம், மொழியியல், ஒப்பாய்வு, மொழிபெயர்ப்பு போன்ற தளங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வு செய்திகளை அளிக்கிறது.
தமிழர் வரலாற்று ஆய்வுகளுக்கும், ஒப்பிலக்கிய ஆய்வுகளுக்கும், பதிப்பியலுக்கும் செய்துள்ள இலக்கியப் பங்களிப்புகளை ஒட்டிய கட்டுரைகள் புதிய பார்வையை முன்வைக்கின்றன. பழங்கால அரசாட்சி, பல்வேறு சமய தாக்கம், யாப்பில் ஏற்பட்ட வடிவங்கள் என எடுத்துக் கூறுகிறது. புதிய ஒப்பாய்வு திசையில் ஆய்வை இட்டுச் செல்லும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு