முகப்பு » ஆன்மிகம் » சிவபுராணம்

சிவபுராணம்

விலைரூ.220

ஆசிரியர் : அவ்வை மு.ரவிக்குமார்

வெளியீடு: ஸ்ரீ ஆனந்த நிலையம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சைவர்களின் வழிபடு தெய்வ மாக விளங்குபவர் சிவபெருமான். அவர் பெருமைகள், ஆற்றல் அளவிடற்கரியவை. பிரும்மம் என்ற பரமாத்மா, பிரம்மாவைத் தோற்றுவித்து, அவர் மூலம்  இவ்வுலகம் உண்டாக்கப்பட்டது என்பர்.  
இந்த நுாலில், ருத்ர பகவான் வரத்தால், பிரம்ம தேவர் உலகில் உயிரினங்களைத் தோற்றுவித்தார் என்று கூறப்பட்டுள்ளது. சிவனுடன் சேர்வதற்குப் பார்வதி தேவி விரதமிருந்த  இடம் ‘கவுரி சிகரம்’  என்றும், சிவனின் யோகத்தைக் கலைத்த மன்மதன் எரிந்து  சாம்பலானதும், மன்மதனே கிருஷ்ணனின் மகனாக பிரத்தியும்னன் என்ற பெயரில் பிறந்தான் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இறைவனை வணங்காமல் இறக்கும் ஜீவன்கள், வைவஸ்வத பட்டணம் என்ற நரகத்திற்கு  வருவர் என்றும், இவர்கள் அனுபவிக்கும் ஆயிரம் நரக வகைகளில் கொடியனவற்றை பட்டியலிட்டு விளக்குவது பெருமை சேர்க்கிறது. சிவனடியார்களுக்கு பயன்படும் நுால்.
டாக்டர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us