முகப்பு » இசை » வாழ்வியல் வழிகாட்டும் விவேக சிந்தாமணி

வாழ்வியல் வழிகாட்டும் விவேக சிந்தாமணி

விலைரூ.320

ஆசிரியர் : வ.ராயப்பன்

வெளியீடு: காவ்யா

பகுதி: இசை

ISBN எண்:

Rating

பிடித்தவை
நீதி நுால்கள் வரிசையில் போற்றப்பட்டு வரும் விவேக சிந்தாமணி பாடல்களுக்கு விரிவான விளக்கவுரை தரும் நுால்.

பாடல்களை பல்வேறு தலைப்புகளில் பகுத்து நிரல்படுத்தித் தந்திருப்பது, படித்துப் புரிந்து கொள்ள எளிதாக உள்ளது. தெளிவான விளக்கங்களோடு மையக்கருத்திற்கேற்ப பண்டைய இலக்கியம், நாட்டுப்புறக் கதைகள், பழமொழி, திரைப்பாடல்களுடன் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

விளக்கங்கள் பெரும்பாலும் குறள்களோடு ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. ஊன்றிப் பார்க்கையில் திருக்குறள் அறங்களின் விரிவாக்கமாகவே விளங்குகிறது. உளநலம், உலகோர் நலம், அறச்சிந்தனைகளை வலியுறுத்தும் கருத்தாழம் கொண்ட பாடல்கள், இன்றைய சூழலுக்கும் பொருந்தி வருவதைக் காண முடிகிறது. அறக் கருத்துக்களை சுருங்க உரைக்கும் நுால்.

– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us