நிகழ்வுகளை பல கோணத்தில் அணுகும் தொகுப்பு நுால். உண்மை சம்பவங்களை, பெயர் குறிப்பிடாமல் பதிவு செய்துள்ளது.
மசாலா படங்களின் நாயக பிம்பம், வியாபார யுக்தி போன்றவை, கதையை மையமாக உடைய படங்களை பின்னுக்கு தள்ளுவதாக கூறுகிறது. விமர்சனம் எழுதிய பின், இயக்குனர், நடிகர்களை சந்திக்கும்போது நடக்கும் உரையாடலை விவரிக்கிறது.
வரலாறு, நாவல், சினிமா குறித்த நுால்களை தேர்வு செய்ய அடையாளம் காட்டும் நுால்.