செட்டி நாட்டு பெயர், பழக்கவழக்கங்களை உள்ளடக்கிய சிறுகதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். ‘மூல நட்சத்திரம்’ கதை உள்ளத்தை தொடுகிறது.
வீட்டில் விளையும் மாம்பழங்களை யாருக்கும் கொடுக்காதவன் கஞ்சன்; தன் வீட்டுக்கே உபயோகிக்காமல் விற்று விடுபவன் கருமி. நோய் தீர்க்கக் கூடியது.
ஊனம் தீர்க்க முடியாதது. அதற்கான கவலை தேவையற்றது. அதை அந்த கோணத்தில் சந்திக்கும் துணிவு வேண்டும் என்கிறது. கருத்துள்ள கதைத் தொகுப்பு நுால். – சீத்தலைச் சாத்தன்