பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை14. (பக்கம்: 264. விலை: ரூ.300)
பாரதிக்கு முன் வ.உ.சி., செய்குதம்பிப் பாவலர், தேசிகவிநாயகர், பாரதிக் குப் பின் 96 கவிஞர் கள், வாழும் கவிஞர் கள் 56 பேரும் உள்ளிட்டு ஒவ்வொரு கவிஞரின் உருவப்படம், வாழ்க்கைக் குறிப்பு, கவிதை ஒன்று என நூல் அமையப் பெற்றுள்ளது.
நூலைத் திறந்தவுடன் 50 கவிஞர்கள் உருவப் படங்கள், அதேபோல் பின் அட்டையின் உட்பக்கம் 50 கவிஞர்கள் படங்கள தபால் தலை அளவில்அழகுற அமைந்துள்ளது. நூல் தொகுப்பை விட ஒவ்வொரு கவிஞர் படத்தையும் ஓவியக் கவிஞர் அமுதோன் அழகுற வரைந்து நூலுக்கு மெருகூட்டியுள்ளார்.
சிலம்பொலி செல்லப்பனின் 28 பக்க அணிந்துரை 100 கவிஞர்கள் பற்றிய அடக்க ஆய்வுரை. படத்துடன் வந்துள்ள கவிஞர்கள் தவிர பிற்பகுதியில் இந்தியாவில் 1802, மலேசியாவில் 256, ஈழத்தில் 95, பிரான்சில் 44 எனத் தமிழ்க் கவிஞர்களின் பெயர்ப்பட்டியல் நீளுகிறது. இதில் இடம் பெறாத கவிஞர்கள் ஏராளமாக உள்ளனர்.
தொகுப்பாசிரியர் தவறி இருந்தாலும் பழனியப்பா நிறுவனம் இப்படிப்பட்ட உயரிய தயாரிப்பின்போது பொறுப்புடன் வெளியிட்டிருக்கலாம். பிரபலமான பல கவிஞர்கள் தவிர்க்கப்பட்டிருப்பதும், சிலர் திணிக்கப்பட்டிருப்பதும் வெள்ளிடைமலை. தமிழ்க் கவிதை இலக்கிய வரலாற்றில் இது ஒரு முன்னோடி நூல், பாராட்டுக்குரிய தயாரிப்பு என்றாலும் உள்ளடக்கம் நிறைவாக இல்லை.