திருப்பூர் குமரன் பதிப்பகம், 57பி, பத்மாவதி நகர், காமராஜர் சாலை, விருகம்பாக்கம், சென்னை-92. (பக்கம்: 232)
மனம் கவரும் மகாபாரதக் கதைகளில் ஒரு சிறு பகுதியே இந்த நளதமயந்தி கதை. அன்னம் தூது செல்ல காதல் கொண்டதையும் , சுயம்வரக் காட்சியையும் ,விதியின் சதியால் காதலர் இருவர் பிரிந்ததையும் ஒரு நாவலாக ஆசிரியர் கதையோடு நகர்த்திச் செல்வது சிறப்பு.
`வெண்பாவிற் புகழேந்தி' என்று போற்றத்தக்க அவரது சில பாடல்களையும், பொருத்தமான பல சுலோகங்
களையும் அத்தியாயத் தலைப்பில் எடுத்தாண்டுள்ளார். மொத்தம் 41 தலைப்புகள்.
சனிபகவானைப் பற்றிய பல செய்திகளும், சனி காயத்ரியும் இந்த நூலைப் படிப்போருக்கு சனிதோஷம் விலகும் வகையில் சிறப்பாகத் தந்திருக்கிறார் ஆசிரியர்.
காதல் வந்தாலே சனி, கால்களைக் கட்டிப் போட்டு விடுவதையும், உதறித் தள்ளி மீண்டும் கரையேறியதையும் , இன்றையக் காதலர்கள் படித்துத் தெளிய வேண்டிய அன்றையக் காதல் கதை இது!
`நளசரிதம்' என்ற இந்த நூலைப் படிப்போரை ஏழரைநாட்டுச் சனி எட்டியும் பாராது, கிட்டேயும் வராது !