சாகித்ய அகடமி, 443, குணா, காம்ப்ளெக்ஸ், அண்ணா சாலை, தேனாம் பேட்டை, சென்னை-18. (பக்கம்: 126).
தள்ளாத வயதிலும் தடியூன்றி பள்ளி மேடை ஏறி பிள்ளைகளுக்கு தேசிய - ஆன்மிக உணர்வை வளர்த்தவர் கவியோகி.
பராசக்தி மகாவியம் தொட்டு 73 கவிதை நூல்கள், 84 நவீனங்கள், 7 சுய சரிதை நூல்கள், 62 பெரியார்களின் வாழ்க்கை வரலாறு, 26 ஆய்வு நூல்கள், 3 பயண நூல்கள், 2 அறிவியல் நூல்கள், 41 ஆன்மிகம் மற்றும் யோகக் கலை நூல்கள், 50 ஆங்கில நூல்கள், 2 தெலுங்கு நூல்கள், 3 வடமொழி நூல்கள், 4 இந்தி நூல்கள், 6 பிரெஞ்சு நூல்கள் என்று வாழ்க்கையை இலக்கியம், இசை, தேசம், சமூகம் என அர்ப்பணித்த பெரியவரின் வாழ்க்கையை அழகுற ரத்தின சுருக்கமாக நூலில் தொகுத்துள்ளார் ஆசிரியர்.
பள்ளிகளில், கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தத்தம் வாழ்க்கையில் செம்மை சேர்க்க நிச்சயம் படிக்க வேண்டிய நூல் இது.