சுவாமி ரங்கநாதானந்தர். தமிழில்: சுவாமி அபிராமானந்தர். ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 56).
உலகளாவிய ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக வாழ்ந்தவர் இந்நூலாசிரியர் சுவாமி ரங்கநாதானந்தர். கடந்த நாற்பது ஆண்டு காலம் அவர் கால் பதிக்காத நாடுகளோ, நகரங்களோ இல்லை எனலாம். பண்பாட்டுச் சொற்பொழிவுப் பயணங்களை மேற்கொண்டு இந்திய வேதாந்தக் கருத்துக்களையும் ஆன்மிக அறிவுரைகளையும் பல நாட்டினர், இனத்தவர், மொழி பேசுவோர்களிடையே அயராது எடுத்துரைத்து இவை யாவும் வாழ்க்கை தமக்கு கற்பித்தவை என்கிறார். அவற்றிலிருந்து எடுத்தாளப்பட்ட சின்னஞ்சிறு குறிப்புகளின் தொகுப்பே இந்நூல். இந்தோனேஷிய அதிபர் சுகர்னோ, காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லா மற்றும் நக்சலைட் இயக்கத் தலைவர் கொண்டபள்ளி சீதாராமய்யா போன்றவர்களுடனான சுவாமிஜீயின் அபூர்வ சந்திப்பும், உரையாடல்களும் சுவைபட கூறப்பட்டுள்ளன.