மதி நிலையம், பிருந்தாவன் அபார்ட்மென்ட்ஸ், 4 (39) தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை-17. (பக்கம்: 284)
சென்னை அம்பத்தூர் கங்கை நகரில் உள்ள ஷ்ரீயோக மாயா புவனேஸ்வரி பீட பூஜ்ய ஷ்ரீபரத்வாஜ சுவாமிகள் எழுதி வழங்கியிருக்கும் நூல்.
ஷ்ரீவித்யைக்கு மூலகுருவாக விளங்குபவர் ஹயக்ரீவர். ஹயக்ரீவர் அகஸ்தியருக்குச் சொல்ல அகஸ்தியர் மூலமே ஷ்ரீவித்யை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு லலிதா சகஸ்ர நாமத்தை உபதேசித்து அருளினார்.
இந்நூலில் பல தலைப்புகளில் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. ஷ்ரீவித்யைக்கு விடி வெள்ளியாய் திகழ்ந்தவர் பாஸ்கர ராயர். அவரது வாழ்க்கை வரலாறு இதில் அமைந்திருக்கிறது.
மற்றும் மகா கணபதி மந்திரம், ஷ்ரீபாலாதிரிபுரசுந்தரி மந்திரம், ஷ்ரீபுவனேஸ்வரி மந்திரம், ஷ்ரீசண்டி நவாட்சரி மந்திரம், சோடசாட்சரி மந்திரம் போன்ற சக்திகளின் மந்திரங்கள் பூஜா விதிகள், காயத்ரி மந்திர விளக்கம், ஸ்தல விருட்சங்கள், சித்த மருத்துவம் ஆகியவை தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளன.
ஆன்மிக மெய்யன்பர்களுக்கு இந்நூல் வரப்பிரசாதம்