முகப்பு » கதைகள் » சுவர்ணக்கிளி

சுவர்ணக்கிளி

விலைரூ.70

ஆசிரியர் : கலைமாமணி விக்கிரமன்

வெளியீடு: சரசவாணி பதிப்பகம்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை
சரசவாணி பதிப்பகம், 48, ரமணா நகர் விரிவு, 2வது மெயின் ரோடு, மாடம்பாக்கம், சென்னை-73. (பக்கம்: 202. )

எழுத்தாளர் விக்கிரமன் எழுதிய பெருங்கதைகளின் தொகுப்பே சுவர்ணகிளி. சிறுகதையின் எல்லைகளைத் தாண்டி அளவில் பெரியதாக உள்ள 11 கதைகளை இந்த நூலில் தொகுத்து தந்துள்ளார் நூலாசிரியர். ஓவியக் கலைஞனின் உணர்வுகளை சித்தரிக்கிறது `பஞ்சவர்ணம்.' `ஒட்டும் உள்ளம்' என்ற கதையின் மூலம் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற கருத்தை விளக்குகிறார். அரசியல் இல்லறத்தில் முடிவதை `ஒரே ஒரு ஓட்டு' சொல்கிறது. நாட்டுப்பற்று, தியாகம், அன்பு போன்ற பல்வேறு நிலைகளை `ஜீவநாதம்' என்ற கதை சொல்கிறது.

ஒரு இலக்கியப் புத்தகத்தை மையமாக வைத்து `இலக்கியத்தின் விலை' என்ற கதை எழுதப்பட்டுள்ளது. உடல் அழகு என்பது அழகல்ல.

அகத்தின் அழகே அழகு என்று எடுத்துக் கூறுகிறது `எது அழகு' என்ற கதை. இவ்வாறு ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கருப்பொருட் களைக் கொண்டு சிறந்த கருத்துக்களை எடுத்துக் கூறுகிறது.

ஒவ்வொரு கதைகளையும் ஒரு எழுத்தாளர் அறிமுகம் செய்துள்ளது இந்நூலுக்குரிய சிறப்பாகும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us