முகப்பு » ஆன்மிகம் » ஆன்மிக வினா - விடை

ஆன்மிக வினா - விடை

விலைரூ.65

ஆசிரியர் : கமலாத்மானந்தர்

வெளியீடு: ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
(நான்காம் பாகம்):ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், பெரியநாயக்கன் பாளையம், கோயம்புத்தூர்-641 020. (பக்கம்: 371)

இந்து மதத்தைப் பற்றி எளிதாக அறிந்து கொள்வதற்கும், இந்து மத சாஸ்திரங்கள், தத்துவம் முதலியவற்றைப் பற்றிய ஐயப்பாடுகள் நீங்கவும் இந்நூல் பெரிதும் உதவும்.

நாம ஜபத்தின் மகிமை, மந்திர உபதேசம் பெறுவது, தீர்த்த யாத்திரைகளின் பயன், விரதங்களின் மகிமை முதலியவற்றை, அறிந்து கொள்ளும் விதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஜபத்தைப் பற்றிக் கூறுகையில் கேள்வி-84க்கு பதில் அளிக்கையில், `கபீர்தாசர் தறி நெய்தபடியே ஜபம் செய்தார்; அண்ணல் காந்தி நூல் நூற்றியபடியே ஜபம் செய்தார்' என்பது, வேலையின் பளுவினால் ஜபம் செய்ய நேரமில்லை என்று நினைப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைகிறது.

கேள்வி 110க்குப் பதில் அளிக்கையில், ` அரசியல்வாதிகளின் சிலைகளைக் கோயில் கோபுரங்களில் வைக்கக்கூடாது' என்பதைப் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டும்.

சத் சங்கம், குருவின் மகிமை, நல்லொழுக்கங்கள் பற்றிய கேள்விகளின் பதில்கள் மிக விரிவாகவும், தெளிவாகவும் உள்ளன. முருகன், சரவணன், சேவல் கொடி, வேல், மயில் முதலியவைகளைப் பற்றிய பதில்கள் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆதிகாரிக புருஷர், அருணகிரிநாதர் ஜோதியில் ஐக்கியமாவது, ஞானிகளின் பாதங்களைத் தொடுவது பற்றிய கேள்விகளுக்கு எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் பதில்கள் அமைந்துள்ளன.

இல்லறம், துறவறம், துன்பத்திலும் இன்பம் காண்பது முதலியவைகளைப் பற்றிய விளக்க உரைகள் விரிவாக உள்ளன. உண்மையான துறவு எது (கேள்வி-345) என்பதற்கு, `அகங்காரம், பலத்தால் ஏற்படும் திமிர், செருக்கு, காமம், கோபம் முதலியவற்றைத் துறப்பதே துறவு' என்னும் பதிலை கீதையின் மேற்கோளுடன் காட்டியிருப்பது ஒரு சிறப்பான அம்சம்.

மன அமைதி வேண்டுவோர் அனைவரும் இந்நூலைப் படித்துப் பயன் பெறலாம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us