ராமகிருஷ்ணமிஷன் வித்யாலயம், பெரியநாயக்கன் பாளையம், கோவை-641 020. (பக்கம்: 352)
உன்னதமான ஒரு ஆன்மிக மாத இதழின் ஆசிரியராக 24 ஆண்டுகள் பணிபுரி ந்த சுவாமி கமலாத்மானந்தர் வாசகர்களின் கேள்விகளுக்கு ஆன்மிக வினா- விடை என்ற பகுதியில் எழுதிய விடைகளைத் தொகுத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த நூலில் ஆன்மிகம் தொடர்பான பல ஐயங்களுக்கு தெளிவான விளக்கம் நமக்கு கிடைக்கிறது. ஐந்து பகுதிகளாக 113 தலைப்புகளின் கீழ் 510 வினாக்களுக்கு சுவாஜி அளித்துள்ள விரிவான விளக்கங்கள் வியக்கத்தக்க பல அரிய ஆன்மிகச் செய்திகள் நமக்கு உணர்த்துகிறது.
திருக்குறள் குறித்தும், வள்ளலார் பற்றியும் நிறைய வினாக்கள் விடைகள், உபநிஷதம் பற்றியும் திருவாசகம் பற்றியும் குறைவான கேள்விகள், வாசகர்களின் கேள்விகள் அனைத்தும் ஆன்மிக ஆர்வத்தைக் தூண்டும் வகையில் இருப்பதையும், சுவாஜிமியின் விடைகள் அந்த ஆர்வத்தை வளர்த்து
ஆன்மிகத் தேடலைத் தொடரச் செய்யும் வகையிலும் அமைந்திருப்பது இந்த நூலின் சிறப்பு. இந்த புத்தகத்தில் உள்ள வினாக்களிலிருந்து மாதிரிக்காக ஒரே ஒரு வினாவும் விடையும்:
கேள்வி: இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தர் வழங்கிய அறிவுரைகளின் சாரம் என்ன?
பதில்: அச்சம் தவிர், ஆண்மையோடிரு.
ஆன்மிகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள், நம்பிக்கையில்லாதவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என எல்லா சமூ கத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் படித்துப் பயன் பெறத்தக்க வகையில் தொகுக்கப்பட்டுள்ள இந்த நூல் ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டும். நண்பர்களுக்கு பரிசு கொடுக்க இதை அனைவரும் பரிந்துரை செய்யலாம்.