'காலத்தால் அழியாத கம்பராமாயணப் பாத்திரங்களுள் ஒன்று அனுமன். கடவுளாகப் பார்த்தாலும் கதாபாத்திரமாகப் பார்த்தாலும் அவன் அளிக்கும் பரவசம் அலாதியானது.
அனுமன் என்கிற ஒரு பிரும்மாண்டமான வார்ப்பைப் பூரணமாக அணுகி ரசித்து உணர இந்நூல் உதவும்.
நூலாசிரியர் ஹரிகிருஷ்ணன், கம்பராமாயணத்தில் ஆழத் தோய்ந்தவர். ராயர் காப்பி க்ளப், மரத்தடி, மரபிலக்கியம், அகத்தியர் போன்ற தமிழ் இணைய மடற்குழுக்களில் இவர் தொடர்ந்து எழுதும் கம்பராமாயணக் கட்டுரைகள் இணைய உலகில் மிகவும் புகழ்பெற்றவை.
இதுகாறும் பண்டிதர்கள் மட்டுமே ரசித்து அனுபவித்து வந்த நமது காவியச் செல்வங்களை, பாமர மக்களும் புரிந்துகொள்ளும் விதத்தில் மிக எளிய மொழியில் விளக்குவது இவரது சிறப்பு.