கடவுளை நேரில் கண்டவர் என்கிற தகவலுக்கு அப்பாலும் ரமகிருஷ்ணரிட மிருந்து நாம் பெறத்தக்க செய்திகள் ஏரளம் உள்ளன. மிகக் கடுமையாகத் தன்னை வருத்திக் கொண்டு ஆன்மிகச் சாதனைகளின் உச்சத்தைத் தொட்டவர் அவர். தமது தரிசனங்களை மிக எளிய முறையில் குட்டிக் கதைகளின் உதவியுடன் வெளிப்படுத்தியதில்தான் அவர் மற்ற ஞானியரிடமிருந்து வித்தியாசப்படுகிறார்.