கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. (பக்கம்: 144). ரூ.50
பμபμப்புகளுக்குப் பஞ்சமில்லாதது, செய்தித்தாள்களின் உலகம். செய்திகள் எங்கிருந்து,
எப்படி வருகின்றன, அவை எப்படித் தேர்வாகின்றன, பக்கங்களை ஆக்கிμமிக்கின்றன என்றெல்லாம் யோசித்துக்கூடப் பார்க்காமல் நாம் தினசரி செய்தித்தாள்களைப் படித்துவிட்டு வீசி விடுகிறோம். உண்மையில், இருபத்து நான்கு மணி நேμங்களுக்கு ஒரு முறை பிறப்பெடுக்கும் செய்தித்தாள்கள் எப்படி உருவாகின்றன, அதன் பின்னால் எத்தனை பேர் எப்படி எல்லாம் உழைக்கிறார்கள், எந்தெந்த அம்சங்கள் ஒருங்கிணைந்து, ஒரு செய்தித்தாளுக்குச் சுவை கூட்டுகின்றன என்பதை யோசித்துப் பார்த்தால்
வியப்பு ஏற்படும். செய்தித்தாள் உலகம் எப்படி இயங்குகிறது என்பதை அக்குவேறு ஆணிவேறாக
அலசிக் காட்டும் இந்நூல் தமிழக அμசின் விருது பெற்றது.