கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 100
தமிழின் முன்னணி நகைச்சுவை எழுத்தாளர் களுள் ஒருவரான ஜே.எஸ்.ராகவனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு முழுக்க, சீரியஸ் ஆசாமிகளையும் புன்னகைக்க வைக்கும் சிரிப்பு வெடிகள்; சிரிக்க வைப்பதுடன், சமகால சமூக நடப்புகள் மீதான அங்கதம் கலந்த கூர்மையான விமர்சனத்துடன் சிந்திக்கவும் தூண்டுகின்றன. "வரிவரியாகச் சிரி', "கிச்சு கிச்சு', "டமால் டுமீல் - 500 வாலா', "தத்தக்கா புத்தக்கா' புத்தகங்களில் உங்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த இந்த நகைச்சுவை ஸ்பெஷலிஸ்ட், இப்பொழுது இன்னும் புதிய உத்திகளுடன் களமிறங்குகிறார். அண்ணாநகர் டைம்ஸ், மைலாப்பூர் டைம்ஸ் ஆகிய பிராந்திய வார இதழ்களில் தொடர்ந்து முந்நூற்று இருபத்தைந்து வாரங்களாக வெளிவந்துகொண்டி ருக்கும் "தமாஷா வரிகள்' பத்தியின் சமீபத்திய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.