லேண்ட் மார்க் பப்ளிகேஷன்ஸ், சென்னை-61. தொலைபேசி எண்.044-2224 2063, (பக்கம்: 276).
வீடு கட்டி வாழ்தல் சிலருக்கு அமையும் பாக்கியம். "சிறுகக் கட்டி பெருக வாழ்'. அடி அடியாகப் பார்த்துக் கட்டும் வீட்டில் அடியெடுத்து வைத்து ஆயுட்காலம் முழுவதும் பல கிளை தாங்கி வாழ்தல் சிலருக்கு அமையும்.
வீடு கட்ட என்ன என்ன தெரிந்திருக்க வேண்டும்? மொத்தம் 23 தலைப்புகளில் "கையேடாக'த் திகழும் வண்ணம் ஆசிரியர் நூலை அமைத்துள்ளார்.பற்பல நில வரைபடங்கள், சிமென்ட் பேப்பர் பேகில் இருக்க வேண்டிய அவசியம் (பக்கம்: 113), நல்ல செங்கல்லுக்கான இலக்கணம் (பக். 118), நவீன கட்டடப் பொருட்களின் விளக்கம் (பக். 123) என்பவை தாமே வீடுகட்ட கனவு காண்பவருக்கும் சிவில் இன்ஜினியரிங் படித்து வேலையைத் தொடங்குபவருக்கும் இந்நூல் வாரி வழங்கும் ஆலோசனைகள்.