வெளியீடு: முல்லை அச்சகம், சென்னை-2. சாதி ஒழிப்பை கொள்கையாக உடைய ஆசிரியர், சில முக்கிய விஷயங்களை இதில் அலசுகிறார். "சேரி' என்ற சொல் பொதுப் பெயர். அரசவை ஆலோசகர்கள், முதல் பூநூல் தரித்தவர்கள் "பறையர்கள்' என்று நிறுவும் உத்தி சிறப்பானது. மேலும் "சாதி கிறிஸ்தவர்கள்' என்ற அடைமொழி கொடுத்து கிறிஸ்தவத்தை விளக்கும் முறையும் சிந்திக்கத்தக்கது.