உலகப் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட மேதை சத்யஜித் ரேவை ஓர் எழுத்தாளராகத் தமிழ் வாசகர்களுக்கு கிழக்கு அறிமுகப்படுத்துகிறது. கலைப்பட இயக்குநராக நாமறிந்த ரேயின் முற்றிலும் மாறுபட்ட மற்றொரு பரிமாணம். இதில் துப்பறியும் கதைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து அளித்து, பல புதிய சாத்தியங்களை உருவாக்குகிறார் சத்யஜித் ரே. இந்தக் கதைகளில் வெளிப்படும் அவருடைய எழுத்தின் வேகமும் சீற்றமும் பிரமிப்பூட்டக்கூடியவை.
1965 தொடங்கி 1992 வரை சத்யஜித் ரே எழுதிய, ஃபெலுடா வீரசாகசக் கதைகள் வங்காளத்திலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. இந்தக் கதைகளின் நாயகன் ஃபெலுடா, வங்காள இலக்கியத்தின் ஷெர்லக் ஹோம்ஸ் என அழைக்கப்படுபவர்.
முதல் முறையாக, சத்யஜித் ரேயின் படைப்புகள் காலவரிசைப்படுத்தப்பட்டு, தமிழில் வெளிவருகின்றன.
ஃபெலுடா வீரசாகசக் கதைகளில் ‘அனுபிஸ் மர்மம்’ நான்காவது புத்தகம். நீலமணி சன்யால் சேகரித்து வைத்திருந்த புராதன எகிப்தியர்களின் மரண தேவனான அனுபிஸ் சிலை காணாமல் போகிறது. அடுத்த சில நாள்களில் ப்ரதுல் தத்தாவின் வீட்டில் இருந்த மதிப்புமிக்க பழைய புராதன பொருள்கள், அழகிய கலைப் பொருள்கள் பலவும் காணாமல் போகின்றன. யார் அந்தக் கலைப்பொருள் திருடன்? ஃபெலுடா துப்பறியத் தொடங்குகிறார். கலைப்பொருள் திருடனை ஃபெலுடா கண்டுபிடித்தாரா?