மனிதன்: புரியாத புதிர் (Man the unknown): தமிழாக்கம்:அ.நடராஜன், வெளியீடு: முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40, தொலைபேசி 26163596, விலை: 200 ரூபாய் (416 பக்கங்கள்)
அமெரிக்காவில் உள்ள ராக்பெலர் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் 30 ஆண்டு காலம் பணியாற்றியவர் அலெக்சிஸ் காரெல். பிரான்ஸ் நாட்டில் பிறந்த சிறந்த மருத்துவரான காரெல், மனித குலத்தை மேம்படுத்துவதற்காக கடந்த 1935ம் ஆண்டு இந்த நூலை வெளியிட்டார்.
நமது அறியாமைக்கு நம் முன்னோரின் வாழ்க்கை வகை; பொறியியல், ரசாயனவியல், பவுத்தவியல் ஆகியவை நம் சூழலை எப்படி மாற்றியிருக்கிறது; நம்மை பற்றி நாம் மேலும் முழுமையாக அறிந்து கொள்ளவேண்டிய அவசியம் உள்ளிட்ட விஷயங்கள் பல்வேறு தலைப்புகளில் அளிக்கப்பட்டுள்ளது.
அச்சம், அவமானம், சினம் ஆகியவை தோலின் ரத்த ஓட்டத்தை பாதிக்கின்றன. பொறாமை, வெறுப்பு, அச்சம் முதலிய உணர்ச்சிகள் வழக்கமாகி விட்டால் அவற்றால் "உயிரி'யின் உடலில் மாறுதல்கள் ஏற்பட்டு நோய்கள் ஏற்படுகின்றன. மனகவலையும், துயரமும் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கின்றன.
ஆன்மிக வழியை ஒருவன் பின்பற்ற வேண்டுமானால், இவ்வுலகின் எல்லா பொருள்களையும் கடைசியில் தன்னையும் அவன் தியாகம் செய்துவிட வேண்டும். இதுபோன்ற அருமையான விஷயங்கள் நூல் முழுவதும் அளிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு டாக்டரும், ஆன்மிகவாதியும், சமுதாய நலன் கொண்டவர்களும், இப்புத்தகத்தை வாங்கி படிப்பது அவசியமாகும் .