வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 200).
அறிவு மயங்கும் போதெல்லாம் ஆன்மிகச் சிந்தனைகள் தெளிவு கொடுக்கும் என்பர். இந்நூலில், சுவாமி சுத்தானந்தாவின் ஆன்மிகக் கருத்துக்கள் நம் மயக்கத்தைப் போக்கி, நம்மை நாமே புரிந்து கொள்ள மிகவும் உதவுகின்றன. சிவசங்கரி ஆங்கிலத்தில் இருந்து மிக எளிய தமிழ் நடையில் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்.
இறைவன் எங்கும் எதிலும் இருக்கிறார் என்பது குறித்தும் (பக்.28), நம்மைப் புரிந்து கொள்ள முயலுதல் குறித்தும் (பக்.65), கடவுளிடமிருந்து நாம் விலக முடியாதது குறித்தும் (பக்.116), கடவுளுக்கு எந்த மதமும் கிடையாது என்றும் (பக்.199) விளக்கும் பகுதிகள் மிக மிக அருமை. ஆன்மிக அன்பர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நல்ல நூல்.