ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், (பக்கம்: 220).
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர்களில் சுவாமி அகண்டானந்தரும் ஒருவர். இவரைக் கங்காதர் மகராஜ் என்றும் பாபா என்றும் அழைப்பர். இவர் இமயம் கடந்து திபெத் வரை விஜயம் செய்து, பல அனுபவங்களைப் பெற்றவர். இவரின் இமயமலை புனிதப் பயணத்தின் விளக்கமாக இந்நூல் திகழ்கிறது. ஐண tடஞு டூச்ணீ ணிஞூ tடஞு ஏடிட்ச்டூச்தூச்ண் என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமே இந்நூல் திகழ்ந்தாலும் மூல நூல் போலவே சுவையாக அமைந்துள்ளது.இந்நூலில் ரிஷிகேசம், யமுனா, கங்கை, சந்திரவதனா, ருத்ரபிரயாகை, குப்தகாசி, கவுரி குண்டம், கேதார்நாத் ஆகிய இடங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. சுவாமிஜி கங்கோத்ரிக்குப் போய்க் கொண்டிருக்கும்போது பாகீரதி நதியில் ஒரு சாது குதித்து, தன்னுடைய உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார் என்ற பழைய நடைமுறையை விளக்கிக் கூறுவது, நம்மை சிந்திக்க வைக்கிறது (பக்.176).இமயம் குறித்த பல செய்திகளை இந்நூல் வாயிலாக அறியலாம்