நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 528).
அண்ணன்மார் சுவாமி கதை கொங்கு நாட்டின் பெருமைகளை கூறும் நாட்டுப்பாடல் இலக்கியம். கர்ண பரம்பரையாக வரும் இது கிராமியக் கலைஞர்களால் உடுக்கை அடித்து வீராவேசத்துடன் பாடப்படும்போது பாடுபவரையும், கேட்ப
வரையும் ஒருங்கே உணர்ச்சிவசப்பட வைக்கும் ஒரு வீர காவியம்.தமிழ் இலக்கியத்தில் நாடோடி இலக்கியத்திற்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. அதற்கு அணி செய்யும் வகையில் இந்த நூலை பெரு முயற்சி எடுத்துப் பதிப்பித்துள்ள கவிஞர் சக்திக்கனலின் ஈடுபாடு பாராட்டுக்குரியது.