ஸ்ருதி பதிப்பகம், 26/29, தர்மராஜா கோவில் தெரு, சைதாப்பேட்டை, சென்னை-15. (பக்கம்: 398).
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு எத்தனை விளக்கவுரைகள் வந்தாலும் அத்தனையும் ஏற்றமுடையதாகவே உள்ளன. இதற்குக் காரணம் ஆழ்வார்களின் பாசுரங்களில் ஆழங்கால் பட்டுப் பலரும் அக்கடலில் மூழ்கி முத்தெடுக்கின்றனர். இந்நூலும் அத்தகு சிறப்புடையதாக விளங்குகிறது.வைணவம் ஜாதி சமய வேறுபாடற்றது என்பதை விளக்கும் இடம் (பக்.22-25), மகா விஷ்ணுவின் ஐந்து நிலைகளை விளக்குவதும் (பக்.28-32) இந்நூலாசிரியரின் அறிவாற்றலுக்கு எடுத்துக்காட்டுகள்.ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்களில் சிலவற்றை நன்கு விளக்கியுள்ளார். அருமையான நூல்.