கோயிலுக்குப் போகிறோம்... மேளவாத்தியம் ஒலிக்கிறது. அபிஷேகப் பொருட்களின் சுகந்த மணம், நாசியைத் தாண்டி மனத்தைத் தொடுகிறது.
'இன்னிக்கு என்ன விசேஷம்?'- சந்தடிகளுக்கு நடுவே எவரையேனும் விசாரிக்கிறோம்.
'ஆடிப்பூரம்' என்றோ, 'கருட பஞ்சமி'என்றோ, 'நாக சதுர்த்தி' என்றோ பதில் வருகிறது.
மேற்கண்ட சின்னச் சின்ன விழாக்களின் சிறப்பு எத்தனை பேருக்குத் தெரியும்?
இந்து மதம் இழைந்தோடும் 'திருவூறல் திருவிழா' பற்றி, 'உறியடித் திருவிழா' பற்றி,'வழுக்கு மரம் ஏறுதல்' பற்றி..?
தீபாவளி, பொங்கல் என்று எல்லோருக்கும் தெரிந்ததையும், இன்னும் முழுமையாக அறியாத பல விழாக்களைப் பற்றியும் சுவைபடச் சொல்கிறது இந்நூல்.
மொத்தத்தில் அர்த்தமுள்ள இந்துமத விழாக்களின் என்சைக்ளோபீடியா இது!