‘எவனொருவன் கர்மசிரத்தையாக யோகத்-தைச் செய்து வருகிறானோ அவன் அதனால் மிகச்சிறந்த பலனை அடைவது நிச்சயம்.
தவிர்க்கமுடியாத சூழ்நிலையின் காரணமாக அதுநாள்வரை தான் செய்துவந்த யோகத்தைப் பாதியில் விட்டுவிட்டாலும் அல்லது யோகத்தை முடிக்காமல் பிறவி முடிந்துவிட்டாலும், அந்த யோகி சிதறுண்ட மேகம்போல வீணாகிப் போகமாட்டான். அவன் தான் செய்த யோகத்தின் பலனை நிச்சயம் அனுபவிப்பான்.
அது எப்படி? யோகத்தின் மீது தீவிரமான ஆசை வைத்து அந்த நெறிகளைக் கடைப்பிடித்து வருபவன், சிறிது காலத்தில் தனது வைராக்கியம் தளர்ந்து உலக ஆசைகளில் மாட்டிக் கொள்கிறான் என்று வைத்துக்கொள்வோம்! அப்படிப்பட்டவன் அடுத்த பிறவியில் யோகத்தைச் செய்கின்ற சூழ்நிலையில்தான் பிறப்பான். பெரும் யோகியர் குடும்பத்தில் பிறந்து முன்விட்ட இடத்திலிருந்து யோகத்தைத் தொடர்ந்து செய்து முன்னேறுவான்’ என்கிறது பகவத் கீதை.
இந்த நூல் அந்த யோகத்தைப் பற்றி அறிந்துகொள்ள, அதன் சூட்சுமத்தைச் சுவைபட சொல்லித்தருகிறது.