நமது பண்டிகைகளில் நவராத்திரிக்கும் சிவராத்திரிக்கும் தனிச் சிறப்பு உண்டு. விடியல் என்பது காரிருள் நீங்கினால்தானே! வாழ்வியலுக்குப் பொருத்தமான பண்டிகைகள் இவை இரண்டும். ராத்திரியில் பூஜை, விடிந்தால் வாழ்க்கையில் வெளிச்சம். பஞ்சபூதங்களில் ஒன்றான நீருக்கு எத்தனை சக்தி என்று எல்லோருக்கும் தெரியும். நீரின்றி அமையாது உலகு. 'சந்திரனில் நீர் இல்லை' என்று அமெரிக்க ராக்கெட்டுகள் வெறுங்கையுடன் திரும்பி வருகின்றன. இங்கே நமது பூமியில் நீருண்டு. ஆகவே, நமக்கு நீடித்த வாழ்வுண்டு. இரவு முழுக்க நீராட்டப்படுகிறார் சிவன். இது சிவராத்திரி. மகேஸ்வரன் குளிர்ந்தால்தானே மண் குளிரும். பஞ்ச பூதங்களில் சூப்பர் ஸ்டார் - அக்னி! ஆதியில் தோன்றியது ஒளி. உலகம் தோன்றியது எப்படி? ஒளிப்பிழம்பாக. அந்த சக்தியே - அன்னை பராசக்தி! ஒளிமயமான எதிர்காலத்துக்காக தீப ஒளி ஏற்றி அவளை வழிபடும் நாட்கள் நவராத்திரி. எப்படிக் கொண்டாடலாம்? சிவராத்திரி - நவராத்திரி விரதம் கடைப்பிடிப்பது எப்படி? சுவையான விளக்கங்களும் கதைகளும் இந்நூலில் கொட்டிக்கிடக்கின்றன.