ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் திருமந்திரப் பாடல்களுக்கு எளிய விளக்கம் அருளி வருகிறார்.முதல், இரண்டு மற்றும் ஆறாம் தந்திரப் பாடல்களின் விளக்கம் மூன்று தொகுதிகளில் முன்னரே நூலாக வெளிவந்துள்ளன. மூன்றாம் தந்திரப் பாடல் விளக்கமே இந்நூல்.அட்டாங்க யோகம் பயிலும் முறை, அதனால் பெறப்படும் பேறுகள், அட்டமா சித்திகள் இவற்றை எல்லாம் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார் சுவாமிகள்.