கடல் காற்றும் ஆன்மிகக் காற்றும் கலந்து வீசும் நகரம் நாகூர்.
சங்கரும் சலீமும் சைமனும் சகஜமாக வந்துபோகும் மத நல்லிணக்க பூமி இது.
வானத்தையும் நீலத்தையும் பிரிக்கமுடியாதது போல் நாகூர் தர்காவையும் சமதர்மத்தையும் பிரித்தறியமுடியாது.
தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வரம் தருவதற்காகவே காத்திருக்கும் அருளாளர் வாழ்ந்த புண்ணிய க்ஷேத்திரம் .
எழுதுகோலையே மந்திரக்கோலாகக் கொண்டு அன்பர்களை வசியப்படுத்தும் வகையில் எழுதிஇருக்கிறார் நூலாசிரியர் நாகூர் ரூமி.