பிரேமா பிரசுரம், 59, ஆற்காடு சாலை, சென்னை-24. (பக்கம்:192)
திருக்கயிலாயம் சீன ஆதிக்கத்தில் உள்ள திபெத்தில் இமயமலையின் வடகிழக்குப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 20 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது என்பது புவியியல் செய்தி. 1962ல் இந்திய சீனப் போரின் போது இந்தியாவின் வசமிருந்த அது, சீனர்வசம் ஆனது என வரலாற்றுச் செய்தி; யாத்திரை ஏற்பாடு, பாதுகாப்பு வழங்கும் இந்திய திபெத்திய எல்லைப்படை, உணவு போக்குவரத்து உறையுள் என்னும் அடிப்படைத் தேவைகளைச் செய்து தரும் உத்தராஞ்சல் மாநிலத்தின் சுற்றுலாத்துறை, விண்ணப்பம் அனுப்பும் முறை, மருத்துவ சோதனை, செலவு என்பன போன்ற வழிகாட்டுதல்கள் என ஆசிரியர் உரையே ஒரு "குட்டி வழிகாட்டி நூல்'.புத்தகக் கட்டமைப்பு, புகைப்பட- வரைபட வெளியீட்டுத்தாள் என அட்டை முதல் இறுதி வரை காட்டியுள்ள அக்கறை பாராட்டிற்குரியது