அமுத நிலையம் லிமிடெட். 17, ஸ்ரீபுரம் 2வது தெரு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 304).
கலைமகளில் வெளிவந்த கதைகளை ஐந்து தொகுதிகளாகத் தொகுத்து அமுதக் கோவை என்ற பெயரில் அமுத நிலையத்தார் வெளியிட்டுள்ளனர். அதில் முதல் தொகுதி இந்நூல். இந்தத் தொகுப்பில் 14 கதைகள் உள்ளன.
மூன்று தலைமுறைகள் என்னும் முதல் கதை கி.வா.ஜ.,வால் எழுதப்பட்டது. எட்டையபுரத் தேவன் என்னும் இரண்டாவது கதையை ரா.ஸ்ரீ.ஸ்ரீகண்டன் எழுதியுள்ளார். நிலா சிரித்தது என்னும் கதையை ஆர்.வி.,யும், புஷ்ப பாணம் என்னும் கதையை எல்லார்வியும் எழுதியுள்ளனர். அவள், கூண்டுக்கிளி என்னும் இரண்டு கதைகளையும் மாயாவி எழுதியுள்ளார். மீதம் உள்ள எட்டு கதைகளும் கி.ரா.,வால் எழுதப்பட்டவை.
அந்தக் காலத்தில் மனித வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதையும் கதைக்களம் எவ்வாறு இருந்தது என்பதையும் அமுதக் கோவையை படித்து அறிந்து கொள்ள முடியும்