தாமரை பப்ளிகேஷன்ஸ்(பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98 (பக்கம்: 96)
கடந்த 1960களில் வெளியான, "தி பிரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வாய் என்னும் ஆங்கிலப் படத்தின் கதையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள நூல் இது. 1939-45 ஆகிய இடைப்பட்ட காலத்தில், தங்கள் படையினருக்கு ஆயுதங்கள் கொண்டு செல்வதற்காக, ஏற்கனவே இருந்த சிங்கப்பூர் - பாங்காக் இருப்புப் பாதையை விரிவாக்கி, பர்மாவின் ரங்கூன் வரை கொண்டு செல்ல ஜப்பான் அரசு முடிவு செய்தது. இந்தப் பணிகளுக்காக பன்னாட்டு போர்க் கைதிகளும், ஒப்பந்தக் கூலிகளும் பயன்படுத்தப்பட்டனர். பசி, நோய், தட்பவெட்ப நிலை ஆகிய காரணங்களால் கட்டுமானப் பணியின்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தக் கூலி தொழிலாளர்களும், போர்க் கைதிகளும் இறந்தனர்.இவர்களில் ஏராளமான தமிழர்களும் அடக்கம். இதை மையமாக வைத்துத் தான் அந்த ஆங்கில படம் எடுக்கப்பட்டு இருந்தது. அந்த வரலாற்றுப் பின்னணியையும், கட்டுமானப் பணியின்போது நடந்த துயரச் சம்பவங்களையும் தொகுத்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. வரலாற்றை மையமாக வைத்து தமிழில் இதுபோன்ற நூல் எழுதப்படுவது வரவேற்கத்தக்கது.