சமநிலைச் சமுதாயம் பதிப்பகம், 5, கிரீம்ஸ் சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை600 006. (பக்கம்: 248).
"நாம் வாள் நிழலிலே வளர்ந்தோம் வாள் நிழலிலேயே வாலிபமடைந்தோம்
இரு முனையும் கூர்மையான இளம்பிறையே எங்கள் சமூகச் சின்னம்வீர மரபினர் முஸ்லிம்கள் எனப் பாடிய இக்பாலின் முன்னோர்கள் காஷ்மீரத்தைச் சேர்ந்த பிராமணர்கள் (பக். 17) எனும் அரிய செய்தியுடன் தொடங்கும் இந்நூலில், இக்பாலின் இலக்கிய, அரசியல் ஈடுபாடுகளை கவிதை மேற்கோள்களுடன் அழகுற படைத்துள்ளார் நூலாசிரியர்.
இக்பாலுக்கு, "ஸர் பட்டம் வழங்க முற்பட்ட போது தனது ஆசிரியர் மௌலவி மீர்ஹஸனுக்கும், "ஷ்ம்ஸுல் உலமா (பக். 76) பட்டம் அளிக்க வேண்டுமென்று நிபந்தனையிட்டது இக்பாலின் குருபக்தியைக் காட்டுகிறது.
"இருநூறு கழுதைகளின் மூளையிலிருந்து ஒரு மனிதனின் சிந்தனையை அடைய முடியாது (பக். 86) என்று ஜனநாயகத்தைக் கேலி செய்யும் இக்கவி தான் பாகிஸ்தான் பிரிவினைக்கும் காரணமானவர்களுள் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாங்கே தரா, பாலே ஜிப்ரீல் போன்ற உருது கவிதை நூல்களும், அஸ்ராரேகுத்இ, பயாமே மஷ்ரிக், ஜாவீத் நாமா போன்ற பார்சி கவிதை நூல்களும் பிரபலமான படைப்புகளாகும்.
"குர்ஆன் என்பது என்ன?, அது முதலாளி வர்க்கத்து சாவுமணி, பாட்டாளிக்கு உற்ற துணை (124) எனும் கருத்துடைய இக்பாலின் அனைத்துச் சிறப்பியல்புகளையும் அழகுற படம்பிடித்துள்ளார் நூலாசிரியர். படித்துப் பயன் பெறத்தக்கது.