முகப்பு » பொது » இது பெரியவங்க உலகம்!

இது பெரியவங்க உலகம்!

விலைரூ.95

ஆசிரியர் : அனில் பாக்சி

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: பொது

ISBN எண்: 978-81-8476-214-3

Rating

பிடித்தவை
விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84

பல நாடுகளில் முதியோர்களின் எண்ணிக்கை பெருகி வருவது, அந்தந்த நாடுகளின் அரசியல், ராணுவம், தொழிற்சாலை போன்ற அனைத்து துறைகளிலும் பெரும் பிரச்னைகளை உருவாக்கி இருக்கிறது என்பதை ஆராய்ச்சிபூர்வமாக விவரிக்கும் நூல்தான் ‘இது பெரியவங்க உலகம்!’
இன்றைய உலகின் ஜனத்தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயத்தில், சமூக உறவில் அவர்கள் பெற்றிருக்கும் அந்தஸ்து, சிக்கல்கள் நிரம்பியதாகவே உள்ளது. உறவு மாற்றம், உணவு மாற்றம், பணியிடம் மாற்றம், உடல்நிலை மாற்றம் அதோடு இன்றைய தலைமுறையின் கலாசார மாற்றம் என பல மாற்றங்களுக்கு ஏற்ப தங்களையும் மாற்றிக்கொள்ளவோ, அனுசரித்துச் செல்லவோ அவர்களால் முடிவதில்லை.
மாறிவரும் விஞ்ஞான உலகின் புதிய வளர்ச்சியும் வயோதிகர்களை மிரட்டத்தான் செய்கின்றன. தொழில்நுட்பரீதியான வசதிகளை பயன்படுத்திக் கொள்வதில் அவர்கள் தயக்கம் காட்டுவது உண்மைதான். கலாசார மாற்றத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறார்கள். காரணம், சீராகச் சென்று கொண்டிருக்கும் தங்களது வாழ்க்கை, தடம் மாறி சிக்கலில் மாட்டிக்கொண்டு விடுமோ என்கிற பயம்தான்.
இப்படிப்பட்ட பயம் தேவையில்லை என்று பல நாடுகளின் சமூகவியல் ஆராய்ச்சித் தகவல்களின் உதவியோடு தெளிவாக உணர்த்துகிறார் நூலாசிரியர் அனில் பாக்சி. முதியோர்கள் தங்கள் வாழ்க்கையை சீர்திருத்தி அமைத்துக் கொள்ளவும், தாங்கள் என்றும் இளமையானவர்களே என்ற மனப்போக்கை உருவாக்கிக் கொள்ளவும் அந்தந்த நாட்டு அரசாங்கம் முதியோர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என தனது ஆதங்கத்தை வலியுறுத்துகிறார்.
‘பியர்ஸன்’ நிறுவனம் ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கும் ‘THE AGEING WORLD’ நூலின் தமிழாக்கம்தான் ‘இது பெரியவங்க உலகம்!’
இது பரந்த உலகம்!

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us