விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
திரையுலக வரலாற்றில் நாடக பாணி கதைகளை மாற்றி, திரைக்கதைகளில் புதுமைகளைப் புகுத்தி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியவர் கே.பாலசந்தர். கடந்த ஐம்பது ஆண்டு காலங்களில், மூன்று தலைமுறை கதாநாயகர்களை ரசிக்கும் ரசிகர்கள் மத்தியில் இன்றும் சிறந்த இயக்குனராக உயர்ந்து நிற்பவர்.
எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலேயே வித்தியாசமான கதை அமைப்புடனும், கலை அம்சத்துடனும் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தைக் கொடுத்து ரசிகர்களைக் கொண்டாட வைத்தவர் கே.பி.
அன்றுமட்டுமல்ல, இன்றுமட்டுமல்ல... என்றுமே, எது மாதிரியுமல்லாத புது மாதிரியான அபூர்வ சினிமா _ அபூர்வ ராகங்கள்!
மென்மையும் அதிரடியும் கலந்த காதல் உணர்வு... எப்போது என்ன நடக்கும் என்று திகைக்க வைக்கும் கதை முடிச்சு... இயற்கையான ஒளியில் நகரும் காட்சிகள்... மன உணர்வுகளை அதி நுட்பமாக ஆழம் காட்டும் பாத்திரப் படைப்பு... என அனைத்திலும் சிறந்த படமாக திரையில் மின்னியது!
இன்றும் அந்தத் திரைப்படம் திரைத் துறையில் உள்ள யாவருக்கும் ஒரு வழிகாட்டிப் படமாக & முன்மாதிரியாகத் திகழ்கிறது. வாசகர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் வெளிவந்துள்ளது, அபூர்வ ராகங்கள் படத்தின் திரைக்கதை & வசன நூல்.