இமையத்தின் நாவல்களில் சாவக்கும் வாழ்வுக்குமான மிகக் குறைந்த இடைவெளி, வாழ்க்கை அமைந்திருக்கும் விதத்தில், வாழும் விதத்தில் மனிதனுக்கும் மிருகத்துக்குமான இடைவெளி, கற்பனைக்கும் யதார்த்தத்துக்குமான இடைவெளி. கவுரமான வாழ்க்கைக்கும் கவுரமான கற்பனைக்குமான இடைவெளி ஆகிய அடிப்படை விஷயங்கள்... வாழ்க்கையின் தளத்தில் நாவலாகி இருக்கின்றன. அப்பட்டமான வாழ்க்கையை... கலையாக எடுத்துச் சொல்வது சாத்தியம்தான் என்று இரண்டாவது முறையும் காட்டியிருக்கிறார் இமையம்.