பைந்தமிழ்ப் பதிப்பகம், 5/220, 5வது முதன்மைச் சாலை, தெய்வசிகாமணி நகர், ஓட்டேரி, வண்டலூர், சென்னை- 48. (பக்கம்:489)
சங்க இலக்கிய நூல்களில், "குறுந்தொகை தனிச்சிறப்பு உடைய நூல் எனலாம். காதல், காதலன், காதலி பற்றியே அதிகம் பேசும் நூல் என்பதால்,
"குறுந்தொகை அனைவருக்கும் சர்க்கரையாய், தேன் பாகாய் இனிக்கும் என்பதை எவரும் ஒப்புவர். அகநானூறு, புறநானூறு போன்றே குறுந்தொகையும் நானூறு பாக்களால் ஆன நூல். ஆயினும் புலவர் தி.குலோத்துங்கன், 128 பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கான உரை விளக்கத்தை, அழகிய நடைச் சித்திரமாக எழுதியுள்ளார். ஒரு நல்ல நவீனத்தை, காவியத்தை வாசிப்பது போன்று சுவையாக இருக்கிறது. "குறுந்தொகை என்றவுடன், அதன் புகழ் மிக்க "பாவான "யாயும் யாயும் யாராகியரோ என்னும் "பா எவர் நினைவிலும் எழும்.