பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 232).
திராவிட இயக்க வரலாற்றில் பெரும் சாதனைப் பெண்மணிகள் என்று பட்டியல் இட்டால் அதில் முதலிடம் பெற மிகத் தகுதியானவர் மூவலூர் இராமமிர்தம் அம்மையார். காங்கிரஸ் இயக்கம், சுயமரியாதை இயக்கம், தி.மு.க., ஆகிய மூன்றிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பொது நலத் தொண்டாற்றியவர். அம்மையார் இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்து, தாசி குலப் பெண்மணி ஒருவரால் வளர்க்கப்பட்டவர். ஆனால், பொட்டுக் கட்டும் கொடுமையில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டு தம் வாழ்க்கை முழுவதும் பெண்களின் நலன்களுக்காகவே தேவதாசி முறை ஒழிப்புக்கு அரும்பாடு பட்டவர்.
அவரது வாழ்க்கை வரலாறு, அடுத்த தலைமுறையினருக்கு பெரிதும் பயன்படும் வகையில் அருமையாக எழுதப்பட்டுள்ளது.