அனுராதா பதிப்பகம், 2, ஜலகண்டாபுரம் சாலை, இடைப்பாடி - 637 101, சேலம் மாவட்டம். (பக்கம்:80)
இந்நூலில், மத்திய அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய நேரடி வரிகளில் ஒன்றான வருமான வரி பற்றி வருமான வரிச்சட்டம், 1961 (மற்றும் வருமான வரி விதிகள் 1962) உள்ள சில முக்கிய பிரிவுகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட சில சட்ட சொற்களுக்கு (பதங்களுக்கு) விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வரி விலக்கு பெற்ற வருமானங்களை பற்றி இரண்டாவது அத்தியாயத்திலும், சம்பளங்களிலிருந்து வருமானம் பற்றி மூன்றாவது அத்தியாயத்திலும் கூறப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் சமீபத்தில் கொண்டு வந்த முக்கிய மாற்றங்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. வீட்டுச் சொத்திலிருந்து வரும் வருமானம் பற்றி நான்காவது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.இந்நூலின் மற்றொரு சிறப்பம்சம் தமிழில் சாதாரண மக்களாலும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது.இதுபோன்ற தமிழில் சட்ட நூல்கள் வெளிவருவது பாராட்டக்குரியதாகும்.