பூம்புகார் பதிப்பகம், 127(ப.எண்:63) பிரகாசம் சாலை,(பிராட்வே), சென்னை-600 108. (பக்கம்:704)
இந்தியாவின் சுதந்திர முழக்கத் திற்குத் தலைவாயிலாக விளங்கியது தமிழகம். அதிலும் வெள்ளையருக்கு எதிராக வெகுண்டெழுந்து போர்க்களம் புகுந்தது இந்தியாவின் முதல் சுதந்திர வீராங்கனையான வேலு நாச்சியார் என்ற பெண்மணி தான் என்பதை உறுதியாக நிலைநாட்டுகிறார் நூலாசிரியர். இரண்டாம் பாகம், "மறவர் குல மாணிக்கங்கள் முழுவதும் மருது சகோதரர்களின் வீரம், ராஜதந்திரம், போர்ச்சாகசங்கள், அறப்பணிகள், வீர மரணம் ஆகியவற்றைப் பதிவு செய்கிறது. ஆசிரியர் அவருக்கே உரித்தான கம்பீர நடையில் அழகு தமிழ் கொஞ்ச அற்புதமாய்ப் படைத்திருக்கும் இந்த நாவல் வரலாற்றுப் புதினப் பிரியர்களுக்கு ஒரு நல் விருந்து.