விலைரூ.200
புத்தகங்கள்
பவுத்த ஒளியின் சகாப்தம்-1
விலைரூ.200
ஆசிரியர் : மூ.பழனிமுத்து
வெளியீடு: மும்மணிப் பதிப்பகம்
பகுதி: ஆன்மிகம்
Rating
சீன தேசத்தை சேர்ந்த பவுத்த குரு ஹ்சிங் யுன், அமெரிக்காவில் புகழ் பெற்ற பவுத்த மடாலயம் ஒன்றை நிறுவி, "பன்னாட்டுப் பேரவை என்னும் அமைப்பையும் உருவாக்கி செயல்படுபவர். ஐக்கிய நாடுகள் அவையின் கலாசாரப் பண்பாட்டு ஆலோசனை உறுப்பினராகவும் உள்ள இப்பெருந்தகை, புத்தர் பிரானின் தம்மபதக் கொள்கைகளை உலகம் முழுக்கப் பரவச் செய்யும் அருந்தொண்டினை ஆற்றி வருகிறார். அவருடைய கருத்துரைகளின் தொகுப்பு தான் இந்நூல்."நீங்கள் ஒரு புத்தராவதற்கு முன்பு நல்ல நண்பர்களை உருவாக்கி கொள்ளுங்கள் என்பது பவுத்த கருத்துகளில் ஒன்று. ஒற்றுமை மற்றும் உலகளாவிய நட்பின் முக்கியத்துவத்தை நமக்கு எடுத்துரைக்கிறார் ஹ்சிங் யுன். 30 அத்தியாயங்களில் நமக்கான பவுத்த ஒளி பரவிக் கிடக்கிறது. படிப்பவர்கள் பாக்கியவான்கள்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!