விலைரூ.65
புத்தகங்கள்
தினம் ஒரு வீரமொழி
விலைரூ.65
ஆசிரியர் : சுவாமி விவேகானந்தர்
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்
பகுதி: ஆன்மிகம்
Rating
பக்கம்: 395
இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்தவர் வீரத்துறவி விவேகானந்தர். தினமும் விவேகானந்தரின் சிந்தனைகளைப் படிப்பதற்கு ஏற்ற வகையில், 365 சிந்தனைகளைத் தாங்கி இந்த நூல், ஓலைச்சுவடி வடிவில் கைக்கு அடக்கமாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த நாளுக்கு ஏற்ற வகையிலும் சிந்தனைகளைப் பொருத்தமாக, சுவாமிகள் படத்துடன் தந்துள்ளது மிகவும் சிறப்பாகும். உதாரணம்...ஆகஸ்ட் 15: (சுதந்திர தினம்) இந்திய மண்தான் எனது சொர்க்கம் இந்தியாவின் நலன்தான் என்னுடைய நலன்.டிசம்பர் 31: (ஆண்டு நினைவு நாள்) பழைய துணிகளைக் களைவது போல் இந்த எனது உடலை விட்டு நான் வெளியேறலாம். ஆனாலும் என் பணி ஓயாது. நான் இறைவனுடன் ஒன்றுபட்டிருப்பதை உலகம் உணரும் வரை என் பணி தொடரும்.
365 நாளும் சொல்ல வேண்டிய வாசகமாக "எழுந்திருங்கள், விழித்திருங்கள், கருதியது கை கூடும் வரை சலியாது உழையுங்கள் என்று, எல்லாப் பக்கங்களும் தந்திருப்பது மிகமிக அருமை!தினமும் காபி குடிக்கும் முன் படிக்க வேண்டிய நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!