விலைரூ.45
புத்தகங்கள்
பதஞ்ஜலி யோக சூத்திரங்கள்
விலைரூ.45
ஆசிரியர் : சுவாமி விவேகானந்தர்
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்
பகுதி: யோகா
Rating
பக்கம்: 240
பதஞ்ஜலி யோக சூத்திரங்களுக்கு, சுவாமி விவேகானந்தர் எழுதிய விளக்கத்தின் தமிழாக்கத்தை ஸ்ரீ ராமகிருஷ்ணமடம் வெளியிட்டுள்ளது. முன்னுரை, மூன்று பாதங்கள், சூத்திரங்கள், அவற்றின் அகர வரிசை எனத் தொகுத்துக் கொடுத்திருக்கின்றனர். எளிய தமிழில், சுலபமாகப் புரியும் வண்ணம் விளக்கங்கள் உள்ளன.
முதல் பாதமாக இருக்கும் சமாதி பாதம், இரு வகை சமாதிகளைச் சொல்கிறது. குரு என்ற ஒருவர் தேவை என்பதை சூத்திரம் 26 (பக்: 42, 43) விளக்குகிறது. ஓம் என்ற சொல்லை உச்சரிப்பதும், அதன் பொருளை சிந்திப்பதாலும், நீங்கள் ஒளி பெறுவீர்கள். ஆன்மா வெளிப்பட்டுத் தோன்றும். பிராணாயாமத்தை சூத்திரம் 34ல் விளக்கமாக ஆசிரியர் கூறுகிறார்.
தியானத்தைப் பற்றி விரிவாக சூத்திரங்கள் 36 - 38 (பக்: 62, 63) விளக்குகின்றன. இரண்டாவதாக உள்ள சாதனை பாதம், சமாதியைப் பெற, யோகப்பயிற்சி முக்கியம் என்று சொல்கிறது. புலனடக்கம், ஆன்மிகத்தைப் போதிக்கும் சாஸ்திரங்களைக் கற்றல், செயலின் பலனை இறைவனுக்கு அர்ப்பணித்தல் முதலியவற்றை சூத்திரம்1, (பக்: 77) விவரிக்கிறது. சூத்திரம் 5, அறியாமையை விளக்குகிறது. கைவல்ய பாதம், சித்திகளைப் பெற்று, ஆசைகளை அகற்றி, தியானத்தின் மூலம் சமாதி நிலையை அடைவதுதான், நிரந்தர இன்பம் தரும் என்று சொல்கிறது. தெளிவான அச்சும், பிழையின்மையும், நல்ல தாளும் கொண்டதும் இந்நூலின் சிறப்பு அம்சமாகும்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!