விலைரூ.350
புத்தகங்கள்
திறனாய்வுப் பார்வையில் மாதவன் படைப்புகள்
விலைரூ.350
ஆசிரியர் : டி.சகாயதாஸ்
வெளியீடு: திருக்குறள் பதிப்பகம்
பகுதி: கதைகள்
Rating
பக்கம்: 454
ஆறு சிறுகதைத் தொகுப்புகளும், நான்கு குறுநாவல்களும், மூன்று நாவல்களும் படைத்துள்ள ஆ.மாதவனின் படைப்புகள் பற்றிய திறானய்வு இந்த நூல். கதைச்சுருக்கம், கதை மாந்தர்கள் என்று பொத்தாம் பொதுவாகத் தலைப்பிடாமல், புதுமையாகத் தலைப்பிட்டுப் புதிய அணுகு முறையில் செல்கிறது, இந்த திறனாய்வுப் பார்வை.
கதைக்களம், பின்புலம், கதைமாந்தர் என்ற மூன்றையும் ஒன்றாக்கிய நூலாசிரியர், நடைக்குத் தனி அத்தியாயம் கண்டுள்ளார். எழுத்தாளரின் நடை தான் வாசகனை இழுத்துச் செல்லும் ஆற்றல் வாய்ந்தது என்பதற்கு, இது ஓர் எடுத்துக்காட்டு.
உரையாடல்களில் இருக்கும் இயல்புதான், நாவலின் உண்மைத்தன்மைக்குச் சான்றளிக்கும் என்னும் கருத்துக்கு வலுவூட்டும் வகையில், மாதவனின் நாவல்களில் வட்டார வழக்குச் சொற்களுடன் கூடிய தமிழ் மொழி நடை அமைந்துள்ளது, சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஆய்வு வடிவில் வந்துள்ள திறனாய்வு நூலான இது, மாதவனின்
படைப்புக்களைக் காட்டும் ரசம் பூசப்படாத கண்ணாடி.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!