விலைரூ.260
புத்தகங்கள்
Rating
127 (ப.எண் 63), பிரகாசம் சாலை (பிராடவே), சென்னை- 600 108. பக்க்ங்கள் -352.
சுதந்திரப் போராட்டத்தின்போது, ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கும் சீக்கிய இளைஞனுக்கும் இடையே மலர்ந்த தெய்வீக் காதலை விவரிக்கும் வரலாற்று புதினம். லாகூரில் பாகிஸ்தான் நாட்டு மக்களைத் திரட்டி தலைமை தாங்கி ஒரு புரட்சி நடத்திய இந்து இளைஞனின் வரலாறுதான் இந்த காவியம். இந்த வரலாற்றைப் பின்னணியாக கொண்டு, பெயர்களை மட்டும் மாற்றி, கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப சில சம்பவங்களும், இலக்கிய ரசனைகளும் காதல உணர்வுகளும் இணைக்கப்பட்டுள்ளன. கதாபாத்திரங்களே மாறி மாறி கதை சொல்வது போல் இந்த புதினம் அமைந்துள்ளது. மேலும் இந்த புதினத்தில் உள்ள 10 அத்யாயங்களிலும் துவக்கத்தில் அறிஞர்களின் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. மகாத்மாவால் கூட உருவாக்க முடியாத இந்து- முஸ்லிம் ஒற்றுமையை இலக்கியத்தால் உருவாக்க முடியும் என்பதைக் காட்ட இதன் ஆசிரியர் முயன்றிருக்கிறார். இந்த புதினத்தின் ஆசிரியரான ஜி.ஏ.வடிவேலு, காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்தவர். இந்தியா விடுதலை பெற்ற பிறகு, புதுச்சேரி சென்று, அதன் விடுதலைக்காக, 1954 வரை போராடியவர். பல்வேறு மக்கள் பணிகளில் ஈடுபட்டவர். சிறந்த எழுத்தாளாரான இவர், பல்வேறு பத்திரிகைகளில் எழுதியுள்ளார். 30 நூல்களையும் எழுதியுள்ளார்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!