விலைரூ.475
புத்தகங்கள்
Rating
பக்கம்: 600
அன்னை பராசக்தியின் 51 சக்தி பீடங்கள் உள்ள இடங்களுக்கு, நேரில் சென்று தரிசித்த அனுபவத்தை வாசகருக்கு வழங்கும் நூல். காஷ்மீர் முதல் ஸ்ரீலங்கா வரையும், மேற்கே கோகர்ணம் முதல் கிழக்கே கோதாவரி வரையும் பரந்து கிடக்கும், அம்பிகையின் அங்கங்களாக விரிந்து கிடக்கும் கோவில்கள், தனித்தன்மையுடன் விளங்குவதை புனிதத் தன்மையுடன் எழுதியுள்ளார் பத்திரிகை ஆசிரியர் மஞ்சுளா ரமேஷ். 52 ஆவது சக்தி பீடமாக பாகிஸ்தானில் உள்ள ஹிங்குளாஜ் மாதா தாட்சாயணியின் தோற்றத்தை தீப்பிழம்பாகத் தரிசித்து பயணத்தை நிறைவு செய்துள்ளனர்.பயணத்தில் கிடைத்த பக்தி அனுபவங்களை விடவும், சேகரித்து எழுதியுள்ள புதிய செய்திகளைப் படிப்பவர் வியப்பர். இதோசில:
* பாகிஸ்தானில் கட்டப்பட்ட நரசிம்மர் கோவிலை உடைத்து விட்டனர். ஆனால், அங்கு பிரகலாதனால் கட்டப்பட்ட பிரமாண்ட தூணை உடைக்க முடியவில்லை. அதிலிருந்து சில நேரங்களில் நரசிம்ம கர்ஜனை கேட்க முடிகிறதாம்.
* மகாராஷ்டிரத்தில் உள்ள கோலாப்பூர் மகாலட்சுமி சத்ரபதி சிவாஜி வழிபட்ட அன்னை. பல கோவில்களை அழித்த முகலாய அரசர்கள் இந்தக் கோவிலை தொடவே இல்லை.
* இலங்கையில் உள்ள நாகபூஷணி அம்மன் கோவிலை, கண்ணகியின் தந்தை மாநாய்கன் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து வந்து வழிபட்டுள்ளார். மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றதும் இங்கு தான்.பாரதம், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா நாடுகளில் பரவிக் கிடக்கும் சக்தி பீடங்களை தரிசிக்க, இந்நூலின் வாசிப்பு நம்மை வழி நடத்திச் செல்லும்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!