ஸ்ரீ ரமண மகரிஷியின் மீது, பக்தி கொண்டோருக்கு இந்த விளக்கவுரை புத்தகம் ஒரு அருமையான அருள் பிரசாதம். மகரிஷி அருளியது அருணாசல ஸ்துதி பஞ்சகம். அதில் ஐந்தாவது பாடற் தொகுதி அருணாசல பஞ்சரத்னம். முகவைக் கண்ண முருகனடிமை, மகரிஷியின் பக்திப் பனுவல்களில் ஈடுபாடு கொண்ட நல்லறிஞர். அவர் புகழை பேச்சின் மூலமும் எழுத்தின் வாயிலாகவும், பரப்பி வருபவர். இந்தப் புத்தகத்தில் ‘அவதாரிகை’ என்று ஒரு கட்டுரை. நூலில் சொல்ல வந்த கருத்துக்களை எல்லாம் கூறுவது ‘அவதாரிகை’ ஆகும். ஸ்ரீரமணோபதேசங்களின் சாரமாக உள்ள கட்டுரைப் பகுதி இது. நல்ல ஆன்மிகம் பேசும் உயர்தர ஸ்ரீரமண பொக்கிஷம் இது.
ஜனகன்